முருகப் பெருமானை வணங்குதல் தமிழர்களிடையே தொண்டு தொட்டு இருந்து வரும் வழக்கம். முருகன் அல்லது கந்தா – குமரா சிவபெருமான் பார்வதி தேவியின் புதல்வர், விநாயகப் பெருமானின் தம்பி. தமிழில் முருகன் என்றால் அழகு, இளமை ஆகியவற்றைக் குறிக்கும். முருகனுக்கு, கார்த்திகேயா, சுப்பிரமண்யா, தண்டாயுதபாணி, சண்முகா எனப் பற்பல பெயர்கள் உண்டு. முருகனுக்கு ஆறு முகங்கள் இருப்பதால் அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு.
தேவர்கள் படையின் சேனைத் தலைவராகப் போற்றப்படும் முருகன், பிரம்மனைப் போன்று மிக உயர்ந்த நிலையிலான ஞானத்துக்காகவும் பகதர்கள் வழிபடுகின்றனர். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பெருந்தொல்லை கொடுத்து வந்த அசுரனான சூரபத்மனை அழிப்பதற்காகவே அவதரித்தார் முருகன். சூரபத்மனுடன் கடும் போர் புரிந்த முருகப் பெருமான் அவன் ஒரு மரமாக மாறியபோது, தனது வேல் கொண்டு அவனை அழித்தார். அந்த மரம் இரு பகுதிகளாக உடைந்தது. ஒரு பகுதி மயிலாகவும், ஒரு பகுதி சேவலாகவும் உருவெடுத்தன.

Post a Comment