Followers

Thursday, 2 May 2019

மனதை அடக்குவது எப்படி?


ஒருசமயம் மனிதன் தன்னுடைய மனதை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது ஒரு சில பக்தர்கள் தியானம் செய்யலாம் என்றனர். சிலர் இறை நாமத்தை உச்சரித்து மனதை அடக்கலாம் என்றனர். சிலர் சாத்வீக உணவாக எடுத்துக் கொள்ளலாம் 

ஊருக்குள் சென்று பிட்சை எடுத்துக் கொண்டு வருவதே எங்களுக்கு உணவு! அது வெறும் அன்னம்தான். தொட்டுக் கொள்ள என்று எதுவும் இருக்காது. சில சமயம் கிடைத்த உணவு எல்லோருக்கும் போதாது. அப்பொழுது அதில் நிறைய நீர் விட்டுக் கரைத்து, கஞ்சியாக ஆக்கி அனைவரும் பகிர்ந்து கொள்வோம்! இந்தக் கஞ்சிக்குச் சிறிது உப்புச் சேர்த்தால் சுவையாக இருக்குமே என்று தோன்றும். ஆனால், நாக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாது; இன்றைக்கு உப்பு வேண்டும் என்று கேட்டால், நாளைக்கு பருப்பு, காய்கறி என்று கேட்கத் தோன்றும். இப்படியாகத் தான் இது ஆரம்பிக்கும். இப்படி நமது தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஒரு முடிவே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆசைகளை உடனுக்குடன் முடிவு கட்டி விட வேண்டும். அலைவதும் நிலையற்றதுமான இம்மனது எதன் வசம் திரிகிறதோ அதனிடமிருந்து அம்மனதை மீட்டு ஆன்மாவின் கட்டிற்குள் கொண்டு வர வேண்டும். மனம் அடக்குதல் என்பது இதுதான்.
 இச்சாதனைதான் துறவு வாழ்க்கைக்கு முதற்படி

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only