பரமசிவன் பார்வதியை மணந்தபோது முப்பத்து முக்கோடி தேவர்களும் ,நாற்பது எண்ணாயிரம் ரிஷிகளும் , கோடானுகோடி மானிடரும் திருகல்யாண காட்சி காண இமயம் சேர்ந்தனர் ..அந்நிலையில் தென்கோடி உயர்ந்து வடகோடி தாழும் அபாயம் ஏற்பட்டது
அப்போது அருகில் இருந்த அகத்தியரிடம் ,'நீ இந்தவேளை தென்திசை சென்று தங்கி இரு .பூமி சமநிலை காணட்டும் என்றார் சிவபெருமான் .அகதியருக்கோ வருத்தம் 'இதுகாறும் இமயத்தின்கண் தவம் இயற்றிய வண்ணம் இருந்தேன் .இன்று எம்பெருமான்
திருமணக்கோலம் காணும் பாக்கியம் எனக்கு இல்லையோ' என்றார் 'நீ இருக்கும் இடத்திலேயே நீ நினைக்கிறபோது வந்து காட்சி தருவோம் ' என்று சிவபெருமான் வாக்களித்தார் .
அகத்தியர் மனமகிழ்வோடு தென்திசை பயணமானார் . பொதிகை மலைச்சாரலில் வாசம் செய்யதார்.அப்போது பூமி சமநிலை அடைந்தது கயிலையில் சிவனாரின் திருமணமும் இனிதே நடந்தேறியது
Post a Comment