Followers

Monday, 17 June 2019

ஓம் சிவ சிவ எப்படி வேண்டுவது ?



இறைவனிடம் பல் வேறு கோரிக்கைகளை வைத்து அருள் வேண்டுவோர் , தேச ,சமய ,ஆலயக் காப்புகளை வேண்டியும் ,தீயோர் வலு அற்றுப் போக வேண்டியும் ,பொது நலனைக் கருத்தில் கொண்டு வேண்டி விட்டு ,பின் தமது ,  இல்ல ,உறவினர் நலன்களுக்காக விண்ணப்பித்தால் ,
  நற் தகுதி கருதி , வேண்டியவாறே அருளப்படும் !
      கூடா நட்பு ,பாடாய்ப் படுத்திவிடும் .
     தேச , சமய ,ஆலய ,இறை விரோதப் போக்குடையோர் நட்பு  கேடே விளைவிக்கும் !
   ""வெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே ""
   பொய்யர் தம்  மெய்க்கு அஞ்ச வேண்டும் !
   எது மெய் ,எது பொய் எனப் பிரித்து அறியும் அறிவை அருளிடவும் பலர் இறைவனிடம் வேண்டும் நிலையில் உள்ளனரே !
     நல்லோர்கள் எல்லோர்களது நலன் காக்க இறைவனிடம் இறைஞ்சுவதே தலையாய வழி !

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only